முன்னாள் அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால், சாபா, இன்று பிற்பகல் செம்பூர்ணாவில் உள்ள அவரது வீட்டில் ஆயிரக்கணக்கானவர் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில் அம்னோவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து இம்முடிவுக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
“சாபாவிலும் தீவகற்பத்திலும் இனத்தையும் நாட்டையும் காக்கும் எங்கள் போராட்டம் தொடரும். நான் அம்னோ தலைவராக இருந்தபோது ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.
ஒரே ஊரில் இரு வித அரசியல்வாதிகள். பதவிகளுக்காக கொள்கையை விற்று சோரம் போன முன்னாள் சாபா முதலமைச்சர், பைரின் கிட்டிங்கான். கொள்கையுடன் அரசியலில் பேர் போடும் இந்த ஷாபி அப்டால். வாழ்த்துக்கள்!
அம்னோ தலைவராக இருந்தால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா!
சாபா ஒரு கிறிஸ்துவ மாநிலமாக இருந்தது சரவாக்கைபோல் மலேசியாவுக்கு முன்னாள். இப்போது இரெண்டு மாநிலங்களுக்கும் மலாய்/மிலானாவ் /முஸ்லிம் தலைகள் இருக்கின்றன எப்படி?