ஜூன் 28 இல் பூச்சோங் மூவிடா இரவு விடுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் உறுதிப்படுத்தியள்ளது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அன்றிரவு மூவிடா இரவு விடுதியில் நடைபெற்ற சம்பவத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது என்று போலீஸ் படை தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாகார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தீவிரவாத செயல்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இருவர் பூச்சோங் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிரியாவில் இருக்கும் மலேசிய குடிமகன் முகமட் வாண்டி முகமட் ஜெடி இடமிருந்து உத்தரவுகள் பெற்றதாகவும், அவ்வுத்தரவுப்படி அவர்கள் மலேசிய மூத்த அரசாங்க அதிகாரிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்த வேண்டும், ஏனென்றால் இத்தரப்பினர்கள் அவர்களுடைய நடவடிக்களுக்கு தடையாக இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று ஐஜிபி கூறினார்.
கேளிக்கை மையங்கள் இஸ்லாத்திற்கு முரணானது என்பதால் அவற்றையும் தாக்குவதற்கான இலக்கையும் அவர்கள் கொண்டுள்ளனர் என்றாரவர்.
ஜூன் 28 க்கும் ஜாலை 1க்கும் இடையில் கெடா, சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 15 பேரும் சோஸ்மா சட்டம் 2012 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகள் ஆவர். அவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் இருக்கும் ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக கோலாலம்பூரில் கொள்ளையடிப்பதற்கான திட்டம் வகுப்பவர். மற்றவர் ஒரு மூத்த ஐஎஸ் தீரவாதிக்கு புகலிடம் கொடுத்து வந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்.
பூச்சோங் மூவிடா சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். முதலில் போலீசார் இது ரவுடிகள் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்றும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை நிராகரித்தும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், ஐஎஸ் தீவிரவாதி முகமட் வான்டியுடன் தொடர்புடைய ஒரு முகநூல் பயனீட்டாளர் இந்தத் தாக்குதலுக்கு தீவிரவாத கூட்டம்தான் பொறுப்பு என்று பதிவு செய்திருந்தார்.
உறுதிப்படுத்தி என்ன ஆகும்? உள்ளுக்குள் இவனைப்போன்றவன்கள் தான் ஆதரவுகொடுப்பான்கள்.
ஆனால் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசிய பகாங் முப்தி பத்திரமாக இருக்கிறார் அல்லவா? அவர் நாட்டுக்கு மிக முக்கியமானவர்! ஆனாலும் நீங்கள் சொல்லுகின்ற “மூத்த அரசாங்க அதிகாரிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள்ஆகியோருக்கு எதிராக” என்று சொல்லுவது தான் நம்ப முடியவில்லை! அவர்கள் தான் இஸ்லாம் அல்லாதவர் தான் எங்களது எதிரிகள் என்கிறார்களே!
தீவிர வாதிகளின் வேலை இல்லை என்று முதலில் அறிவித்த காவல் துறையினர் இப்போது தீவிர வாதிகளின் சதி வேலைதான் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது…
“தீவிரவாத …….. நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 15 பேர் கைது…கைது…கைது….கைது….கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இருவர் பூச்சோங் ………”
இதுவே இந்தியர்கள் என்றால் உடனுக்குடன் சுடப்பட்டு இருப்பார்கள் . (….telah di tembak mati….)
இந்தியர்கள் என்றால் கைது என்ற பேச்சிக்கு இடம் இருந்திருக்காது…
தீவிர வாதிகளுக்கு பணம் உட்பட நிறைய ஆதரவாளர்கள் ஊக்கம் கொடுப்பதால் இந்த பரதேசி தீவிர வாதிகள் தங்களுடைய பேடி தனத்தை மக்களிடம் காட்டுகிறார்கள் [ முடிந்தால் ராணுவத்திடம் தங்கள் வீரத்தை காண்பிக்கலாமே ]
சிவா! அவசரப்படாதீர்கள்! குண்டர் கும்பல் என்றால் சுட்டுக் தள்ளலாம். தீவிரவாதிகள் என்றால் அப்படிச் செய்ய முடியாது! அவர்களிடமிருந்து நிறைய விஷயங்கள் கறக்க வேண்டி உள்ளதே!
நமது அரசாங்கத்திற்கும் அரசாங்க எடுபிடிகளுக்கும், எல்லா காலகட்டத்திலும் காலம் கடந்து தெரிந்து கொளவ்தும் / புரிந்து கொள்வதும் புதிலல்லவே !
Wednesday, Jun 29, 2016 1:37 pm
போலீஸ்: பயங்கரவாதிகள் என்றால் அருகில் உள்ள கேளிக்கை விடுதிகளைத் தாக்கி இருப்பார்கள்
++++
Monday, Jul 4, 2016 7:42 pm
பூச்சோங் இரவு விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய தீவரவாதிகள்தான், ஐஜிபி உறுதிப்படுத்தினார்
++++
இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வெல்ல போவது நமது IGP-தான் என்பது உறுதியாகி விட்டது.