முஸ்லிம்கள் ஐஎஸ்ஸை விட்டும் மற்ற பயங்கரவாதக் கும்பல்களை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும் என பாஸ் வலியுறுத்தியது. அவர்களின் செயல்கள் இஸ்லாத்துக்கு எதிரானவை.
இவ்வாறு கூறிய கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் எந்தச் சமயமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை என்றார்.
“சமயத்துக்காகவும் இஸ்லாத்தை அமல்படுத்தவும் போராடும் முஸ்லிம்கள் எளிய வழியில் அதைச் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு..
“விரைந்து வெற்றி காண நினைப்பவர்கள் வன்முறைகளை நாடுவார்கள், எவற்றையெல்லாம் இஸ்லாம் தடை செய்துள்ளதோ அவற்றையெல்லாம் மீறுவார்கள். இது இஸ்லாம் பற்றி தப்பெண்ணத்தை உருவாக்கி விடும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதை தாண்டா உங்க வேலை…
IS க்கு ஆதரவு கொடுக்கணும்னு ceramahkalil சொன்னது மறந்துட்டு பேசறானுங்க ஆதாரம் வேணுமா டா நான் காட்டுறேன்
உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஈன ஜென்மங்கள்— எல்லா வெளி வேஷம்.