நேற்று சரவாக் ரிப்போர்ட் அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் 1எம்டிபி கணக்கு அறிக்கையை வெட்ட வெளிச்சமாக்கி இருப்பதால் பேரரசரும் சுல்தான்களும் அவ்வறிக்கையை பாதுகாக்கும் இரகசியக் காப்புத் தன்மையை அகற்றி அதைப் பகிரங்கமாக வெளியிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேரரசரும் மாநில சுல்தான்களும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (1எம்டிபிமீது) ஒரு விளக்கமளிப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின் பிரதி ஒன்றுக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும்.
அதன் பின்னர் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் பாதுகாப்பை அகற்றி பொதுமக்களும் அதைப் படித்துப் பார்க்க வகை செய்தல் வேண்டும் என முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.