சரவாக் ரிப்போர்ட் 1எம்டிபி விசாரணையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் சிலவற்றைக் கசிய விட்டிருப்பது குறித்து போலீஸ் விசாரணை செய்ய வேண்டும் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார்.
“சரவாக் ரிப்போர்ட் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வரும் ஒரு ஆவணம் தன் வசமிருப்பதாக அறிவித்திருப்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும்”, என சாலே மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பாதுகாப்பை முன்னிட்டு அரசாங்கம் சில ஆவணங்களை ஓஎஸ்ஏ ஆவணங்கள் என வகைப்படுவதாக அமைச்சர் கூறினார்.
ஒஎஸ்ஏ ஆவணங்களில் உள்ள விவரங்களை சரவாக் ரிப்போர்ட் கசிய விட்டிருப்பதாகக் கூறப்படுவதை போலீஸ் விசாரிக்க வேண்டும். தவறினால் மேலும் பல ஓஎஸ்ஏ ஆவணங்கள் கசியக்கூடும். அதன் விளைவாக நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து உண்டாகலாம் என சாலே கூறினார்.
சரவாக் ரிப்போர்ட் ஓஎஸ்ஏ ஆவணங்களை வெளியிட்டிருப்பது மலேசிய அரசாங்கத்தின் பணியாளர்களிடையே “ஊழல்” தலைவிரித்தாடுகிறது என்பதை நிரூபிக்கிறது என்றால் “ஒஎஸ்ஏ ஆவணங்களை சரவாக் ரிப்போர்ட் கசிய விட்டிருப்பதாக கூறப்படுவதை போலீஸ் விசாரிக்க வேண்டும். தவறினால் மேலும் பல ஓஎஸ்ஏ ஆவணங்கள் கசியக்கூடும்” என்று கூறி பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், மலேசிய அரசாங்கத்தின் பணியாளர்கள் “ஊழல்வாதிகள்தான்” என்பதை ஒப்பு கொள்கிறார்.