1எம்டிபி மீதான ஏஜியின் அறிக்கையை மறைக்க முயல்வதை பேரரசர் தடுக்க முடியும், அசிஸ் பாரி

 

Probariசரவாக் ரிபோர்ட் 1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வரின் தணிக்கை அறிக்கையின் பல பகுதிகளைக் கசிய விட்டிருப்பதைத் தொடர்ந்து கருத்துரைத்த சட்டப் பேராசிரியர் அசிஸ் பாரி, அந்த ஆவணத்தை மக்களிடமிருந்து தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு அளிக்கவில்லை என்று கூறினார்.

அதிகாரத்துவ இரகசியச் சட்டம் (ஒஎஎஸ்) போன்ற ஒரு சாதாரணமான சட்டம் ஏஜியின் அறிக்கை சம்பந்தமாக அரசமைப்புச் சட்ட விதியை மீறமுடியாது என்று அவர் கூறினார்.

அரசமைப்புச் சட்டம் ஒஎஸ்எயைவிட மேலானது என்பதை பேராசிரியர் நினைவுறுத்தினார்.

அரசமைப்புச் சட்ட விதி 106(2) இன் கீழ் ஏஜி அரசாங்க கணக்குகளை பரிசீலைக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறார்; பரிசீலித்த கணக்குகள் பற்றிய அறிக்கையை அகோங்கிடம் தாக்கல் செய்யும் கடமையைக் கொண்டிருக்கிறார். அகோங் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் கடமையைக் கொண்டிருக்கிறார் என்று அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார்.

அரசமைப்புச் சட்டத்தின் ஜனநாயகத் தன்மையின் அடிப்படையில் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை தடுக்கும் அதிகாரம் அகோங்கிற்கு அல்லது ஏஜிக்கு அல்லது நாடாளுமன்றத்திற்கு கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே, அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை தடைசெய்யும் முயற்சி இருக்குமானால், அந்தத் தடை அகற்றப்படுவதை உறுதிசெய்யும் கடமையை அகோங் கொண்டிருக்கிறார் என்றாரவர்.

ஒப்புயர்வற்ற சட்டம் என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தை கீழறுப்பு செய்யமுடியாது. ஒஎஸ்எ அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டது, அரசமைப்புச் சட்டம் ஒஎஸ்எ கட்டுப்பட்டதல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏஜியின் அறிக்கையையும் அதனுடன் வருடாந்திர பட்ஜெட்டையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியதற்காக நஜிப் நிருவாகத்தையும் அசிஸ் பாரி கடிந்து கொண்டார்.

“அது தவறு, அரசமைப்புச் சட்ட விதி 107 (1) இன்படி. அரசாங்கம் ஏஜியின் அறிக்கையை தடுத்து நிறுத்த முடியாது.

:உண்மையில், அரசமைப்புச் சட்ட விதி 107 (1) இன் கீழ் அந்த அறிக்கை நேரடியாக அகோங்கிற்குச் செல்ல வேண்டும், பிரதமரின் அலுவலகத்திற்கு அல்ல” என்று அவர் விளக்கம் அளித்தார்.

உண்மையில், அரசமைப்புச் சட்ட விதி 107 (1) இன் கீழ் அந்த அறிக்கை நேரடியாக அகோங்கிற்குச் செல்ல வேண்டும், பிரதமரின் அலுவலகத்திற்கு அல்ல” என்று அவர் விளக்கம் அளித்தார்.

அந்த அறிக்கை வெளியிடப்படுவது அரசாங்கத்தின் விருப்பத்தைப் பொறுத்து இருக்கிறது என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா மற்றும் பிஎசி தலைவர் ஹசான் அரிப்பின் நினைப்பது தவறு என்றும் அவர்கள் அரசமைப்புச் சட்ட விதி 107 (1)ஐ புறக்கணித்துள்ளனர் என்றும் அசிஸ் பாரி மேலும் கூறினார்.