பங்களாதேசம், டாக்காவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்கலில் இஸ்லாமிய போதகர் டாக்டர் ஸாகிர் நாய்க்கை தொடர்புபடுத்தியதற்காக மலேசிய புத்த சமயம், கிறிஸ்த்துவ சமயம், இந்து சமயம், சீக்கிய சமயம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் ஆலோசனை மன்றத்திற்கு (எம்சிசிபிசிஎச்எஸ்டி) எதிராக மலாய் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான பெர்காசா போலீஸ் புகார் செய்துள்ளது.
இந்த ஆலோசனை மன்றம் கூறியுள்ள கருத்துகள் ஆதாரமற்றவை. ஆகவே போலீசார் அந்த மன்றத்தை இஸ்லாமியர்களின் உணர்வுகளை தொடும் வகையில் விடுத்துள்ள தவறான அறிக்கை குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வீரா பெர்காசா தலைவர் ஸாஹிர் ஸுல்கமார் அவரது புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சாஹீர் சூல்கமார் போலீசுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த தேவையில்லை. நம் நாட்டு காவல் துறையினருக்கு எல்லா நியாயங்களும் எல்லா தர்மங்களும் தெரியும். சில மேதாவிகள் மலாய்க்காரர்களை மட்டுமே இந்நாட்டு குடிமகனாக கருதி மற்ற இனத்தவர்களை இன்னும் வந்தேறிகளாகவே கருதுகின்றனர். இன்னும் சிலர் இஸ்லாமியர்கள் மட்டுமே இறை நம்பிக்கை உள்ளவர்கள் போலவும் மற்ற மதத்தோர் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் போலவும் மக்களிடையே தங்களின் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். ருக்கும் நெகரா கோட்ப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் ஒவ்வொரு மலேசியரும் இந்நாட்டின் விசுவாசிகள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்பதும் நம் நாட்டு காவல் துறைக்கு நன்றாகவே தெரியும்.
பெர்காசா போன்ற இனவெறி அமைப்புக்கு வேறு வேலை கிடையாது– இப்படித்தான் வாயிற் வளர்க்கமுடியும் ஈன ஜென்மங்கள்- ஒழுங்காக உழைத்து வாழமுடியுமா? பகுத்தறிவுடன் விவாதிக்கமுடியுமா? அல்லது பேசத்தான் முடியுமா? அறிவிலிகள்.