“டூயிட் ராயா” கேலிச் சித்திரத்திற்காக இஙா மீது தேசநிந்தனை விசாரணை

 

ngtobechargedஹரிராயா கொண்டாட்டத்தின் போது டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான இஙா கோர் மிங் அவரது முகநூலில் குழந்தைகளும் விருந்தினர்களும் “டூயிட் ரயா” பண உறைகளைப் பெறுவது போலவும் அவற்றை இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பிட்ட கேலிச் சித்திரம் பதிவு செய்ததற்காக தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் கூறினார்.

இது ஹரிராயா கொண்டாட்டத்தை அவமதிப்பாத கருதப்படுகிறது. அக்கேலிச் சித்திரத்திற்கு எதிராக ஏராளமான போலீஸ் புகார்களைப் பெற்றிருப்பதாக ஐஜிபி கூறினார்.

ஆகவே, இஙாவுக்கு எதிராக குற்றவியல் சட்டம் செக்சன் 298 மற்றும் தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணையைத் தொடங்கிவிட்டோம் என்று அவர் தெரிவித்தார்.