‘1எம்டிபி மீதான கணக்காய்வாளர் அறிக்கையை வெளியிட்டால் சரவாக் ரிப்போர்ட் செய்த தவறு தெரிய வரும்’

showஅரசாங்கம்  1எம்டிபிமீதான   அரசாங்கத்  தலைமைக்  கணக்காய்வாளரின்  தணிக்கை  அறிக்கையை  வெளியிட   வேண்டும்  எனக்   கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.    அப்போதுதான்  சரவாக்     ரிப்போர்ட்      செய்த   தவறு  என்னவென்பது  தெரிய  வரும்   என்கிறார்  பாஸ்   துணைத்   தலைவர்   துவான்  இப்ராகிம்  துவான்  மான்.

1எம்டிபி   இரகசிய   ஆவணம்  என்றும்   அதன்  உள்ளடக்கத்தைத்  தப்பும்தவறுமாக    சரவாக் ரிப்போர்ட்  வெளியிட்டிருக்கிறது  என்று  தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்   சாலே  சைட்  கெருவாக்  கூறியிருப்பது   குறித்துக்  கருத்துரைத்தபோது    துவான்  இப்ராகிம்  இவ்வாறு  கூறினார். “உண்மையை   உண்மையைக்  கொண்டுதான்  போராட  வேண்டும்”,  என்றாரவர்.

“தலைமைக்   கணக்காய்வாளர்   அறிக்கையை   வெளியிடுவதன்வழி  ,    சாலே  கூறிக்கொள்வதுபோல்,   சரவாக்  ரிப்போர்ட்    தவறு   செய்திருந்தால்   என்ன  தவறு   செய்தது,   எப்படி  மக்களைத்  தப்பாக  நினைக்க  வைத்தது   என்பது   தெரிய  வரும்”,  என்று   இன்று  ஓர்  அறிக்கையில்  அவர்  தெரிவித்தார்.