நேற்றிரவு லஹாட் டத்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்தோனேசியர்கள் ஆயுதந் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டார்கள்.
நள்ளிரவு நேரத்தில் அச்சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது என பெர்னாமா கூறிற்று.
அக்கடத்தல் சம்பவம் தொடர்பில் சாபா போலீஸ் ஆணையர் டத்தோ அப்துல் ரஷிட் ஹருன் இன்று பின்னேரம் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்துவார் என அறியப்படுகிறது.
–பெர்னாமா
“தீவிரவாதிகளின் தரகர்கள்” பலர் நமது நாட்டு அமைச்சரவையில் இருக்கும்போது அண்டை நாடான இந்தோனேசியா கவலை பட வேண்டிய அவசியமே இல்லை. கடத்தல்க்காரர்கள் கோரும் பிணைப்பணத்தை “தீவிரவாதிகளின் தரகர்களான” எங்கள் நாட்டு அமைச்சர்களிடம் “நன்கொடை” என வழங்கினால் தீர்ந்தது பிரச்னை.