பங்களா-கேட் வழக்குக் காரணமாக சீனர்கள் வாக்குகள் மீண்டும் எதிரணிக்கே செல்லும்- மா

mahகெராக்கான்   தலைவர்   மா   சியு   கியோங்,   பினாங்கு     முதலமைச்சர்    லிம்  குவான்  எங்   பங்களா  வீடு  வாங்கியதன்மீது    வழக்குத்   தொடுக்கப்பட்டிருப்பதை    அடுத்து    சீனர்களின்   வாக்குகள்     மீண்டும்      டிஏபி  பக்கமே   திரும்பிச்  செல்லும்    என்று  நினைக்கிறார்.

2015  பொதுத்    தேர்தலில்     பக்கத்தான்  ரக்யாட்டையும்    டிஏபி-யையும்     ஆதரித்த  சீன    வாக்காளர்களில்    85  விழுக்காட்டினர்   சரவாக்    தேர்தலிலும்    ஜூன்   18-இல்    நடந்த  இரட்டை   இடைத்   தேர்தல்களிலும்     பிஎன்   திரும்பியதைக்  காண  முடிந்ததாக    மா   சைனா  பிரசுக்கு   வழங்கிய   நேர்காணலில்    கூறினார்.

அதன்  பயனாக   சரவாக்கில்    டிஏபி   வசமிருந்த  ஐந்து    மாநிலத்    தொகுதிகளை  பிஎன்னால்  கைப்பற்ற   முடிந்தது.   சுங்கை  புசார்,   கோலா  கங்சார்  தொகுதிகளையும்    தக்க   வைத்துக்  கொள்ள  முடிந்தது    என்றாரவர்.

ஆனால்,  லிம்மீது    வழக்கு     தொடுக்கப்பட்டிருப்பதால்    சீனர்களின்    மனம்   மாறும்.

வரும்  தேர்தலில்  டிஏபி   பெரிய  அளவில்    வெற்றி   பெறுவது   நிச்சயம்      என்று  மா  நினைப்பதாக  சைனா  பிரஸ்   கூறிற்று.