பினாங்கில் திடீர் தேர்தலா? டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை

ramasamyடிஏபி   அதன்   தலைமைச்  செயலாளரும்  பினாங்கு   முதலமைச்சருமான  லிம் குவான்  எங்மீது  சுமத்தப்பட்டுள்ள  இரண்டு   ஊழல்  குற்றச்சாட்டுகளை  எதிர்கொள்ள   இரண்டு   வழிமுறைகளைப்  பின்பற்ற   முடிவு   செய்துள்ளது.

ஒன்று,   லிம்முக்கு  எதிரான   குற்றச்சாட்டுகள்  குறித்து   மக்கள்  என்ன  நினைக்கிறார்கள்  என்பதைக்  கண்டறிய  திடீர்    தேர்தலை    நடத்துவது.

இன்னொன்று,  பொதுத்  தேர்தலுக்குக்   காத்திருப்பது.  பொதுத்  தேர்தல்   2018  ஆகஸ்டில்தான்  நடைபெறும்.

“எதைப்  பின்பற்றினாலும்   லிம்முக்கு   எதிரான   நடவடிக்கை    அரசியல்  நோக்கம்  கொண்டதுதானா    என்பதையும்   மாநிலத்தில்   பக்கத்தான்  ஹராபான்    ஆட்சி   தொடர்வதை     விரும்புகிறார்களா  என்பதையும்  முடிவு    செய்யும்  பொறுப்பை  மக்களிடமே  விட்டு  விடுவோம்”,  என  துணை  முதலமைச்சர் II  பி.இராமசாமி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.