ஐஜிபி: கோயில் சிலைகள் உடைக்கப்படுவதை விசாரிக்க சிறப்புக் குழு

 

IGPnospeculationபினாங்கில் தொடரச்சியாக இந்துக் கோயில் சிலைகள் உடைக்கப்படுவதை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார்.

அக்குழுவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்கள் இவ்விவகாரம் குறித்து தமக்கு நேரடியாகத் தகவல் அளிப்பார்கள் என்று அவர் மலேசியாகினியிடம் பேசுகையில் கூறினார்..

இக்குழுவுக்கு பினாங்கு மாநில துணை போலீஸ் அதிகாரி எ.தெய்வீகன் தலைமை ஏற்றுள்ளார்.

கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம் குறித்து கவலை தெரிவித்த காலிட். இது விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்று எச்சரித்தார்.

சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து இச்சிலைகள் உடைப்புச் சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அரசி (ஐஎஸ்) அல்லது இதர சம்பந்தப்ப தீவிரவாத கும்பல்களுக்கும் தொடர்புகள் இருப்பதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றார்.

இருந்தாலும், போலீசார் எந்த ஒரு சாத்தியத்தையும் நிராகரிக்கவில்லை என்று மேலும் கூறினார்.

கோயில் நிருவாகக் குழுக்கள் பாதுகாப்புக்காக்காக இரகசிய கேமிராக்கள் பொருத்துவது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்  என்று காலிட் ஆலோசனை கூறினார்.

இந்து சமூகம் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட காலிட், குற்றவாளிகளை தேடிப்பிடிக்கும் பொறுப்பை    போலீசாரிடம்         விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார்.