பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒராண்டுக்கு முன்பு 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை வரும்வரை பொறுமையுடன் இருக்குமாறு கூறியதை மறந்து விட்டாரா என்று வினவுகிறார் முன்னாள் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின்.
அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அதன் சில பகுதிகள் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் இரகசியமானவை என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என முகைதின் கூறினார்.
அரசாங்கம், அதன் இரகசியக் காப்புத் தன்மையை அகற்றி அந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என அந்த பாகோ எம்பி கேட்டுக்கொண்டார்.
அப்போதுதான் அந்த நிறுவனம்மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை உண்டு என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றாரவர்.
வெளிநாட்டு “நன்கொடையை” பெற மறக்காமல் பல மணி நேரத்தை நேரத்தை விரயமாக்கும்…மற்ற விவகாரங்களில் மறதி அதிகம் என்று நக்கல் பண்ணுகிறார் முகைதின்