1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ளதை வெளியில் கசியவிட்டவர்களை அமைச்சர்கள் நம்பிக்கை துரோகிகள் என்று முத்திரை குத்தியிருப்பது பற்றிக் கருத்துரைத்த பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் உண்மையிலேயே யார் துரோகிகள் எனத் தம் முன்னாள் சகாக்களிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார்.
1எம்டிபி-இல் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர்கள் துரோகிகளா அல்லது 1எம்டிபிவழி நாட்டின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு அந்த முறைகேட்டை மூடி மறைக்கிறார்களே அவர்கள் துரோகிகளா என்று முகைதின் வினவினார்.
“உண்மையில், நாட்டைக் கொள்ளையடித்தவர்களும் தங்களின் அக்குற்றச்செயலை மூடிமறைத்தவர்களுமே துரோகிகளாவர்”, என முகைதின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
what muyudeen say is correct the
money is public money .
“உண்மையில், நாட்டை கொள்ளையடித்தவர்களும் தங்களின் அக்குற்றச்செயலை மூடிமறைத்தவர்களுமே துரோகிகளாவர்”, என முன்னாள் அம்னோ உறுப்பினர் மற்றும் முன்னாள் துணை பிரதமரான முகைதின் கூறுவது காதுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், “நாட்டை கொள்ளையடிப்பவர்கள் அக்குற்றச்செயலை மூடிமறைப்பது” என்பது ஒரு சாதாரண குடிமக்களால் முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். அப்படியானால் முகைதின் “நாட்டை ஆளும் நஜிப்தான் நாட்டை கொள்ளையடித்து அக்குற்றச்செயலை மூடிமறைக்கிறார்” என குற்றம் சாட்டுகிறாரோ என்ற கேள்வி எழுகிறதே.