மக்கள் ஆதரவைத் திரும்பப் பெற ஹராபான் உறுதி

azizahபக்கத்தான்  ஹராபான்    அதன்  பலவீனங்களைச்    சரிசெய்து     இழந்த   ஆதரவைத்  திரும்பப்   பெற   முடியும்  என்பதில்  உறுதியாக   இருப்பதாய்    அக்கூட்டணித்    தலைவர்    டாக்டர்   வான்  அசிசா  வான்   இஸ்மாயில்    கூறினார்.

இன்று   பக்கத்தான்   தலைவர்  மன்றக்   கூட்டத்துக்குத்    தலைமையேற்ற  பின்னர்    செய்தியாளர்களிடம்   பேசிய   வான்  அசிசா,   தேர்தல்களில்    மும்முனைப்    போட்டி  என்பது   எதிரணிக்  கூட்டணியின் பலவீனங்களில்   ஒன்று     என்றார்.

அடுத்து  வரும்    தேர்தல்களில்   பிஎன்னுடன்  எல்லா  இடங்களிலும்    நேரடிப்    போட்டிதான்.  அதற்கான    ஏற்பாடுகள்   செய்யப்படும்  என்றார்.

“பல்வேறு   பலவீனங்களுக்கும்   விரையில்  தீர்வுகாண   தலைவர்  மன்றம்   உறுதி  பூண்டுள்ளது.

“மூன்று   கட்சிகளும்    அடிக்கடி   ஆலோசனைக்  கூட்டங்கள்   நடத்தி  ஹராபானின்  வியூகங்களை   நுணுகி  ஆராய     வேண்டும்    என   முடிவு  செய்துள்ளோம்.  அப்போதுதான்   மக்களின்   ஆதரவைத்   திரும்பப்  பெற  முடியும்”,  என்றாரவர்.

பினாங்கு   முதலமைச்சர்  லிம்  குவான்   எங்  மீதான   ஊழல்   குற்றச்சாட்டுகள்    பிரதமர்     நஜிப்    அப்துல்    ரசாக்கின்   நிலையை   வலுப்படுத்தும்    அரசியல்  நோக்கில்   கொண்டுவரப்பட்டவை  என்பதால்   அவர்   பதவி விலக    வேண்டியதில்லை  என்றும்  மன்றம்  முடிவு   செய்ததாக   வான்  அசிசா   கூறினார்.