மகாதிர் தலைமையில் புதிய கட்சி?

newபிரதமர்  பதவியிலிருந்து   விலகிப்   பத்தாண்டுகளுக்குமேல்   ஆகும்  நிலையில்    டாக்டர்     மகாதிர்   முகம்மட்    அவரின்   இப்போதைய    எதிரியான   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்கை   எதிர்க்க    தீவிர   அரசியலுக்குத்    திரும்பக்கூடும்   எனத்   தெரிகிறது.

மருத்துவராக  இருந்து   அரசியலுக்கு   வந்த   டாக்டர்   மகாதிர்,  தமது  91வது   அகவையில்    அம்னோவின்   முன்னாள்  உறுப்பினர்களைக்  கொண்டு   அமைக்கப்படும்  ஒரு   கட்சிக்குத்     தலைமை    ஏற்கலாம்   என்று   கூறப்படுகிறது.

இதன்   தொடர்பில்    பக்கத்தான்   ஹராபான்   தலைவர்களுடன்    கலந்துபேச   ஒரு   கூட்டம்  ஏற்பாடு    செய்யப்பட்டிருப்பதாக    முன்னாள்  பத்து   கவான்   அம்னோ   உதவித்   தலைவர்    கைருடின்   அபு   ஹாசான்    கூறினார்.

“அடுத்த   பொதுத்   தேர்தலை   எதிர்கொள்வது   குறித்து    வியாழக்கிழமை   அவர்களுடன்    பேசப்  போகிறோம்.  மகாதிர்   தலைமையில்   புதிய   கட்சி    அமைக்க   திட்டமிட்டிருக்கிறோம்”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.