மலேசியாகினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பும் சாலே-க்கு செய்தியாளர் கழகம் கண்டனம்

ioj தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே    சைட்    கெருவாக்    மலேசியாகினிக்கு   ஏதிராக    நடவடிக்கை   எடுக்கப்போவதாகக்  கூறியுள்ளதற்கு   மலேசிய   செய்தியாளர்  கழகம் (ஐஓஜே)  எதிர்ப்புத்   தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய  முஸ்லிம்   பிரச்சாரகரான   ஜாகிர்   நாய்க்   குறித்து   வெளியிட்ட    செய்திகளுக்காக   மலேசியாகினிக்கு    எதிராக    நடவடிக்கை  எடுக்கப்போவதாக   சாலே   திங்கள்கிழமையன்று   கூறி  இருந்தார்.

“உணர்வுகளைச்  சீண்டிவிடும்  வகையில்   நடந்துகொள்வதாகக்   காரணம்    கூறி   செய்தியாளர்களுக்கும்      ஊடக   நிறுவனங்களுக்கும்  எதிராக   நடவடிக்கை  எடுக்கும்  போக்கு   அதிகாரிகளிடையே   அதிகரித்து   வருவதைக்  கழகம்    கவனித்து   வருக்கிறது.

“பொதுநல  விவகாரங்களில்   நடவடிக்கை   எடுக்கும்    உரிமை   அரசாங்கத்துக்கு   உண்டு.

“ஆனால்,   ஒரு   செய்தியாளர்   அல்லது    செய்தி   நிறுவனம்    செய்தி  வெளியிடும்   விதத்தில்     தனக்கு  உடன்பாடு   இல்லை  என்பதற்காக   அதிகாரிகள்    சட்ட   நடவடிக்கை  எடுக்கப்போவதாக  மிரட்டுவது   நியாயமாகாது”,  என்று   அது  ஓர்   அறிக்கையில்   கூறியது.