ஆலயங்கள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள்மீதான விசாரணையை போலீஸ் துரிதப்படுத்த வேண்டும்

shanகடந்த   இரண்டு   மாதங்களில்    நான்கு  ஆலயங்கள்   சேதப்படுத்தப்பட்டிருப்பதை   அடுத்து   போலீஸ்   அதன்   விசாரணையைத்   துரிதப்படுத்த    வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆலய  உடைப்புச்   சம்பவங்களை  விசாரணை   செய்வதற்கு    பினாங்கு   போலீஸ்   துணைத்   தலைவர்   ஏ. தெய்வீகன்  தலைமையில்   சிறப்புப்  பணிக்  குழு   அமைக்கப்பட்டிருப்பதைப்  பாராட்டிய    இந்து    சங்கத்    தலைவர்   ஆர்.எஸ். மோகன்  ஷான்,   போலீசார்  சம்பவங்கள்மீது    விசாரணையை   உடனடியாக      தொடங்கி  விட   வேண்டும்  என்றார்.

“இன்னொரு   சம்பவம்    நடந்துவிடக்   கூடாது.  அதுதான்  என்  கோரிக்கை.   எல்லாரையும்   நீண்ட  காலத்துக்கு   அடக்கி  வைத்திருக்க   முடியாது.  இந்து   சங்கம்   என்ன   செய்கிறது,  மஇகா   என்ன   செய்கிறது  என்று   கேட்கிறார்கள்”,  என   மோகன்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.