கடந்த இரண்டு மாதங்களில் பினாங்கில் நான்கு ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் இரண்டில்- கெடா, மாஹாங்கிலும் பேராக், செலாமாவிலும்- சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மாஹாங் ஸ்ரீ மகாமுத்துமாரியம்மன் ஆலையத்தில் ஒரு விக்கிரகம் அதன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஆலய அதிகாரி த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார்.
அதற்கு நான்கு கிலோமீட்டர் தொலைவில், செலாமா, தொங் ஹர்ஸ்ட் தோட்டத்தில் உள்ள சுப ஸ்ரீ சக்தி கனகவல்லி ஆலயத்தில் கதவு உடைக்கப்பட்டு இரண்டு தெய்வத் திருச் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இரண்டு சம்பவங்களும் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளன. இரண்டு ஆலயங்களிலும் விக்கிரங்களுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் காணவில்லை.
அந்த ஆலயங்களின் பெயரில் ‘சக்தி’ இருக்கிறது. ஆனாலும் உண்மையான ‘சக்தி’ யினைத்தான் காணோம்.
ஐயா சிங்கம் , கடவுள், இறைவன், தெய்வம் எல்லாமே அப்பாவித்தனமான நம்பிக்கைத்தான் !
நீலாவணன் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எங்களுக்கு கடவுள்அ நம்பிக்கை இருக்கு. “அரசன் அன்று கொள்வான் , தெய்வம் நின்று கொள்ளும்”.
கடவுள் ஆணா பெண்ணா? ஆண்டவனா நம்மை படைத்தான்? நாமல்லவா அவனை படைத்தோம்? மன ஆறுதலுக்காக மன திருப்திக்காக நாம் நல்ல நிலையில் வணங்குவது தவறில்லை. ஆண்டவனை வைத்து பணம் பண்ணுவதும் மற்றவர்களை அடிமையாக்குவதும் மற்றவர்களை துன்புறுத்தி கொல்வதும் எந்த ஆண்டவனும் சொல்லவில்லை–எல்லாம் ஈன மனிதர்களின் ஈன செயல்கள். அதிகார வெறி ஜாதி வெறி மத வெறி இன வெறி இதை எல்லாம் தகர்த்து மனித இனம் முன்னேற வேண்டும்– முடியுமா? ஆணடவன் இருக்கானா என்று எனக்கு தெரியாது–ஆனால் கெட்டது கெடுதி செய்வது மனிதாபிமானம் கிடையாது என எனக்கு தெரியும். நான் ஆண்டவனுக்கு பயந்து ஏதும் செய்வது இல்லை– கெட்டது கெடுதி செய்வது தவறு என எனக்கு தெரிந்துதான் நான் செய்வது இல்லை– பக்தி பகல் வேஷம் போடுவது நியாயமா? ஆண்டவன் இருந்தாலும் அவன் அதை ஏற்க மாட்டான்.
இந்த சம்பவங்கள் இவற்றை செய்பவர்களின் சமய வெறியினை காட்டுகிறது. இதை செய்பவர்கள் கண்டிப்பாக யாரோ ஒருவரின் தூண்டுதலால் தான் நடக்கிறது என்று நம்புகிறேன். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் தான் குடும்பமும் இந்த சாப கேர்டிற்கு ஆளாகும் என்பதை உணராமல் இருப்பது துரதிஸ்ட்மே. கூடிய விரைவில் இவர்கள் தண்டனை அடைய போவது திண்ணமே. அப்போது அவர்கள் கடவுளும் பாதுகாக்க மாட்டார்.
சரியாக சொன்னீர்கள் .
இது ஏதோ வேறு நோக்கத்திற்காக நடப்பவையாகத்தான் தோன்றுகிறது. பணத்திற்காக எதையும் செய்வார்கள் .