டிஐ-எம்: 1எம்டிபி தணிக்கை அறிக்கைமீதான இரகசியக் காப்பை அகற்ற இதுவே நல்ல தருணம்

ti-m1எம்டிபி     மீதான   தலைமைக்    கணக்காய்வாளரின்    அறிக்கையின்  சில    பகுதிகள்    என்று    கூறிக்கொண்டு   சரவாக்    ரிப்போர்ட்   சிலவற்றை    வெளியிட்டிருப்பதால்    அந்தத்   தணிக்கை    அறிக்கையின்   இரகசியக்  காப்புத்  தன்மையை   அகற்றுவதற்கு  இதுவே    நல்ல  தருணம்   என  ட்ரேன்பேரன்சி   இண்டர்நேசனல்   மலேசியா(டிஐ-எம்)  நம்புகிறது.

அந்த   அறிக்கை   இன்னும்    இரகசியமாக     வைக்கப்பட்டிருப்பதுதான்    புரியாத    புதிராக    உள்ளது    என   அந்த  ஊழல்- எதிர்ப்பு   என்ஜிஓ-வின்   தலைவர்   அக்பர்  சத்தார்   கூறினார்.

“அந்தத்  தணிக்கை   அறிக்கையில்தான்  உண்மை   அடங்கியுள்ளது,  அதை  வெளியிட  தயங்குவதேன்,  ‘உண்மையை   வெளியிட’  மறுப்பது  ஏன்?”,  என்றவர்   வினவினார்.

அந்த   அறிக்கையை   அதிகாரத்துவ   இரகசிய   சட்டத்தின்(ஓஎஸ்ஏ)கீழ்  பூட்டி  வைத்திருப்பது   ஏன்  என்று     கேள்வி  எழுப்பிய  அக்பார்,   அரசாங்கம்   பொதுமக்களிடமிருந்து    எதையாவது   மறைக்கப்  பார்க்கிறதா  என்றும்   வினவினார்.