‘அழுக்குப்பிடித்த’ இந்துக்கள் என்று கூறும் போதனா வில்லைகளை உருவாக்கிய விரிவுரையாளர் பணிநீக்கம்

utm யுனிவர்சிடி   டெக்னோலோஜி   மலேசியா  (யுடிஎம்)வில்,  இஸ்லாமிய  மற்றும்    ஆசிய   நாகரிகம்   மீதான  பாடத்  திட்டத்துக்காக   ( தித்தாஸ்)  இந்துக்களையும்   சீக்கியர்களையும்   இழிவுபடுத்தும்    வகையில்  பாடம்   போதிக்கும்   பட  வில்லைகளைத்    தயாரித்திருந்த   விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

உயர்க் கல்வி அமைச்சர்  இட்ரிஸ் ஜுசோ   இதைத்   தெரிவித்தார்.

ஒரு  சர்ச்சை  உண்டாகக்  காரணமாக    இருந்த  விரிவுரையாளரைப்   பணிநீக்கம்    செய்ய   அப்பல்கலைக்கழகம்   முடிவு  செய்தது   என  அவர்     சொன்னார்.
அந்த விரிவுரையாளரை பணிநீக்கம் செய்துவிட்டதாக நேற்று   தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக     இன்று  காலை      பிஎப்எம்   வானொலி  நேர்காணலில்   அமைச்சர்  கூறினார்.