இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தணிக்கை அறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்ட (ஓஎஸ்ஏ)த்தால் பாதுகாக்கப்படும் ஓர் ஆவணமாகும்.
“தகவல் அளித்தோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க நாங்கள் அறிக்கை முழுவதையும் திரும்பவும் தட்டச்சு செய்தோம். அப்படிச் செய்ததால் தட்டச்சுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். அதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இது அசல் அறிக்கையின் மறுவடிவமே”, என்று சரவாக் ரிப்போர்ட் கூறியிருந்தது.
மலேசியாகினி அந்த அறிக்கையை எடுத்து வெளியிட முடியாது. அப்படிச் செய்தால் சட்டச் சிக்கல்கள் வரும்.
இரகசிய ஆவணங்களை அனுமதியில்லாமல் விநியோகம் செய்தாலோ, கைவசம் வைத்திருந்தாலோ ஈராண்டு கட்டாயச் சிறைத் தண்டனை உண்டு.
நீங்கள் என்னதான் கொடுக்கு பிடி போட்டாலும், எங்கள்… வல்லவர்கள்.
“அசல் அறிக்கையின் மறுவடிவமே” என்று கூறி விட்டீர்கள், உடனே எங்கள் நாட்டு எருமைகள் “அசல் அறிக்கையை மாற்றும்வடிவம்” செம்மையாக நிறைவேற்றி கொண்டிருப்பார்கள்.