அண்மைய மாதங்களாக பிலிப்பீன்ஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடலோடிகள் பலர் கடத்தப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பிலிப்பீன்சுக்கு ஆபத்து நிரம்பிய வழிகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு இரணுவப் பாதுகாப்பு வழங்கலாம் என இந்தோனேசிய தற்காப்பு அமைச்சர் ரியாமிசார்ட் ரியாசூடு பரிந்துரைத்துள்ளதாக வியட்நாம் செய்தி நிறுவனம் (விஎன்ஏ) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் கப்பல்கள் குழுவாக பயணம் வேண்டும் என்றும் அவற்றுக்கு இந்தோனேசிய கடற்படைக் கப்பல்கள் வழித்துணையாக உடன் செல்லும் என்றும் அமைச்சர் சொன்னார்.
பிலிப்பீன்ஸ் கடல் எல்லையில் பிலிப்பீன்ஸ் கடற்படை பாதுகாப்புப் பணியைத் தொடர வேண்டும் என்றாரவர்.
இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து 24 இந்தோனேசிய கடலோடிகளும் மலேசியர்கள் சிலரும் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் பிலிப்பீன்சுக்குமிடையில் கடல் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.
பிலிப்பின்சில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு “நன்கொடை” என வாரி வழங்கும் எங்கள் நாட்டு அமைச்சருக்கே ஆப்பா ? என்று சிவப்பு சட்டையினர் இங்குள்ள உங்களுடைய தூதரகம்முன் ஆர்ப்பாட்டத்துடன் அராஜகத்தில் ஈடுபட நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.