பிரான்சில் கூட்டத்தின்மீது லாரி தாக்குதல்: 80பேருக்குமேல் பலி

franceபிரான்ஸின்  நீஸ்  நகரில்  மக்கள்   பேஸ்டில்   நாளைக்  கொண்டாடிக்   கொண்டிருந்தபோது    வேகமாக  ஓடிவந்த    ஒரு  லாரி  வெறித்தனமாக   கூட்டத்தில்  மோதியதில்   80   பேருக்குமேல்  கொல்லப்பட்டதாகவும்  மேலும்  பலர்  காயமுற்றதாகவும்   கூறப்படுகிறது.

பயங்கரவாத -எதிர்ப்பு   அதிகாரிகள்  அத்தாக்குதல்மீது    விசாரணை  நடத்தி  வருவதாக   அந்நாட்டு   ஊடகங்கள்   தெரிவித்தன. லாரியில்   ஆயுதங்களும்  கையெறி  குண்டுகளும்  இருந்ததாக   அரசாங்க  அதிகாரி  ஒருவர்   கூறினார்.

பாரிஸ்  நகரில்  ஐஎஸ்  துப்பாக்கிக்காரர்களும்   தற்கொலை  குண்டு  வெடிப்பாளர்களும்   தாக்குதல்   நடத்தி  எட்டு  மாதங்களும்   ஒரு  நாளும்  ஆகும்  வேளையில்    இத்தாக்குதல்   நடந்துள்ளது.  பாரிஸ்   தாக்குதலில்  130பேர்  கொல்லப்பட்டனர்.

இப்புதிய  தாக்குதல்  தனி ஒருவரின்  கைவரிசை   போல்  தோன்றுகிறது.

அந்த  25-டன்  லாரியைக்  கூட்டத்தில்  மோதி,  மோதியதுடன்  நில்லாமல்  100மீட்டர்  தூரத்துக்குக்  கூட்டத்துக்குள்ளேயே   வேகமாக  ஓட்டிச்  சென்ற   லாரி  ஓட்டுநரை   போலீசார்   சுட்டுக்  கொன்றனர்.

இக்   கோடுரச்  சம்பவத்திற்கு  உலக  நாடுகள்  பலவும்  கண்டனம்   தெரிவித்துள்ளன.