எம்பி பதவிக்கு முழுக்குப் போடுகிறார் தெங்கு ரசாலி

gua musமலேசியாவில்  மிக  நீண்ட  காலம்  எம்பியாக  இருந்து  வருபவர்   தெங்கு  ரசாலி.  குவா  மூசாங்  எம்பி  ஆன   அவர்,   இதுவே   தம்  கடைசி  தவணை  என்கிறார்.

உத்துசான்  மலேசியாவிடம்   பேசிய    கிளந்தான்   இளவரசர்  மக்கள்  செல்வாக்கு   நிறைய   இருந்தாலும்   பொறுப்பை  மற்றவர்களிடம்   ஒப்படைக்க   வேண்டிய   தருணம்   வந்து   விட்டதாகக்  கருதுகிறார்.

“நீண்ட  காலம்   இருந்து  விட்டேன்.  இனியும்   பொறுப்பேற்க  முடியாது  என்பதை (குவா  மூசாங்  அம்னோ  தொகுதியிடம்)   தெரிவித்து  விட்டேன்……….45 ஆண்டுகள்  எம்பியாகவும்   கிட்டத்தட்ட  60 ஆண்டுகள்  அம்னோ  தொகுதித்   தலைவராகவும்  இருந்து   விட்டேன்.

“80-வயதாகப்  போகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதியாக   இருக்க   போதுமான  வலுவுமில்லை. இடத்தை  விட்டுக்  கொடுக்க   வேண்டிய  தருணம்   வந்து  விட்டது”,  என்று  தெங்கு   ரசாலி   கூறினார்.

“ஆனால்,  நான்  (குவா   மூசாங்)  அம்னோ  தலைராகவும்    எம்பி-ஆகவும்    தொடர    வேண்டும்   என்பதே  பெரும்பாலோரின்   விருப்பம்.  ஏனென்றால்,  இந்தத்  தொகுதி   எதிரணிக்குச்  சென்று  விடும்  என்று  அவர்கள்   அஞ்சுகிறார்கள்.

“அது (வெற்றி)  என்னைப்  பொறுத்ததல்ல.  ஒற்றுமையும்  ஒத்துழைப்பும்    உள்ளவரை   இது   பாதுகாப்பான  தொகுதிதான்”,  என்றாரவர்.