சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு: அன்வார் வழக்கில் நீதிபதி தீர்ப்பு

prisonerசிறையில்   உள்ள  மலேசியர்களுக்கும்  வாக்களிக்கும்   உரிமை   உண்டு.  ஆனால்,  அந்த  உரிமையைப்   பயன்படுத்த   விரும்பினால்   அவர்கள்  சிறைத்  துறை   தலைமை   இயக்குனருக்கு   எழுதி  அனுமதி  பெற   வேண்டும்  என  கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றம்   இன்று   தீர்ப்பளித்தது.

என்றாலும்,  கடந்த   பெர்மாத்தாங்   பாவ்   இடைத்  தேர்தலின்போது   தாம்  வாக்களிக்க  அனுமதிக்கப்படாததை   ஆட்சேபித்து    அன்வார்  இப்ராகிம்   தொடுத்திருந்த   வழக்கை   நீதிமன்றம்   தள்ளுபடி   செய்தது.  அவர்   தேர்தல்    ஆணைய(இசி)த்தை    எதிர்வாதிகளில்  ஒருவராக   குறிப்பிட்டிருந்ததுதான்  இதற்குக்  காரணம்.

வழக்கு   தள்ளுபடி   செய்யப்பட்டாலும்  அளிக்கப்பட்ட   தீர்ப்பு   முக்கியமானது   என   அன்வாரின்  வழக்குரைஞர்   என். சுரேந்திரன்  கூறினார்.  அத்தீர்ப்பின்படி ,  ஆயிரக்கணக்கான   சிறைக்கைதிகள்  வாக்களிக்கும்   உரிமை  பெற்றிருக்கிறார்கள்   என்றாகிறது  .

தீர்ப்பளித்த   நீதிபதி   நோர்  பீ  அரிப்பின்,   வழக்குச்  செலவாக  ஐயாயிரம்  ரிங்கிட்டை   முன்னாள்   எதிரணித்   தலைவர்   கொடுக்க   வேண்டும்  என்று  உத்தரவிட்டார்.

அன்வார்  அரசாங்கத்தையும்   முன்னாள்  இசி  தலைவர்   அப்துல்  அசீஸ்  யூசுப்பையும்  எதிர்வாதிகளாகக்  குறிப்பிட்டிருந்தார்.

அரசுத்  தரப்பு   வழக்குரைஞர்    அமர்ஜித்  சிங் ,  இசி   அன்வாரின்   வாக்களிக்கும்  உரிமையை   மறுக்கவில்லை   ஏனென்றால் ,   மறுக்கும்  அதிகாரம்   அதற்கில்லை  என்றார்.  அன்வார்   சிறைத்  துறை   தலைமை   இயக்குனருக்கு   எழுதி  அனுமதி   கேட்டிருக்க    வேண்டும்   என்று  அவர்  சொன்னார்.