முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு புதிய கட்சியை அமைப்பது ஓர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
எதிரணியினர் ஒன்றுபட்டிருப்பது முக்கியம் என்பதை வலியுறுத்திய அன்வார், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் போர் ஓய்வுக்கு அழைப்பு விடுத்திருப்பதையும் பாராட்டினார்.
1998-இல் துணைப் பிரதமராக இருந்த அன்வாரைப் பணிநீக்கம் செய்தவரே மகாதிர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமா மகாதீரே !
புதிய கட்சி என்று நேரத்தை விரயமாக்காமல், ஒற்றுமை இல்லாமல் இருக்கும் எதிர்கட்சிகளை ஒன்றினைத்து வைத்தாலே போதும், அம்னோ என்ன BN-ன்னே கலகலத்து விடும்.
நீங்கள், தற்பொழுது இந்தியாவை ஆளும் “BJP”-யின் வழிமுறைகளை கையில் எடுப்பதே சிறந்ததாகும்.
அதாவது சங் பரிவாரங்கள் ஒற்றுமையாக இல்லாதபோது “ஜன சங்” இரண்டே நாடளுமன்ற தொகுதிகளில்தான் வெற்றிபெற முடிந்தது, பிரிந்து இருந்த அனைத்து சங் பரிவாரங்களை ஒன்றினைத்து “BJP” என்ற ஒரே குடையில் கீழ் கொண்டு வந்தபோதுதான் தங்களுடைய பலத்தை உணர்ந்தார்கள்.
50-க்கும் மேற்பட்ட சங் பரிவாரங்கள் ஒன்றினையும்போது, 10-க்கும் குறைவாக இருக்கும் எதிர்கட்சிகளை ஒன்றினைக்க வைப்பது முடியாத காரியமா என்ன ! முயற்சி செய்யுங்கள் மாமா மகாதீரே !