புதிய கட்சியை வழிநடத்தும் வலிமை மகாதிருக்கு இல்லை

sabriமுன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்   அரசியலிலிருந்து   ஓய்வு  பெற்று   நீண்ட   காலமாகிறது  என்பதால்    விரைவில்    அமையவுள்ள   புதிய   அரசியல்   கட்சியை   வழிநடத்தும்   வலிமை   அவருக்கு  இல்லை   என்கிறார்   அம்னோ    உச்சமன்ற   உறுப்பினர்   இஸ்மாயில்   சப்ரி.

அம்னோ  மூத்த   தலைவர்   தெங்கு  ரசாலி  போன்றோ    பிகேஆர்  நடப்பில்    தலைவர்   அன்வார்  இப்ராகிம்   போன்றோ  வலிமையும்  செல்வாக்கும்  கொண்டவர்   அல்லர்  மகாதிர்   என்று  இஸ்மாயில்  கூறினார்.

“அன்வார்  அம்னோவிலிருந்து  விலக்கப்பட்டபோது  வலுவான   துணைப்   பிரதமராக   இருந்தார்.

“மகாதிர்  பணிஓய்வு  பெற்று   நீண்ட   காலமாயிற்று.  அன்வாருடனும்  தெங்கு  ரசாலியுடனும்  ஒப்பிட்டால்    அவருக்கு   அந்த  அளவு  வலிமை   இல்லை”,  என  கிராமப்புற,  வட்டார  மேம்பாட்டு   அமைச்சர்   கோலாலும்பூரில்  கூறினார்.

“புதிய  கட்சி   மக்களிடத்தில்  எந்தத்  தாக்கத்தையும்   ஏற்படுத்தாது. வெறுப்படைந்தவர்கள்     மட்டுமே   அதில்   சேர்வார்கள்”,  என்றாரவர்.