தோல்வியில் முடிந்த துருக்கியின் இராணுவப் புரட்சி மலேசியர்களுக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட பக்கத்தான் ஹராபான், துருக்கியர்கள் அரசாங்கத்தை மாற்ற விரும்பினால் அமைதி வழிகளில்தான் அதைச் செய்ய வேண்டும் என்று கூறியது.
“துருக்கியில் இராணுவம் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது ஜனநாயக முறைகளை அப்பட்டமாக மீறும் ஒரு செயல் என்பதுடன் துருக்கிய மக்களின் விருப்பத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் செயலுமாகும்”, என ஹராபான் தலைவர்கள் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், அமனா தலைவர் முகம்மட் சாபு ஆகியோர் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறினர் .
ஹராபானின் ஆதரவு அதிபர் எர்டோகனுக்கும் துருக்கிய மக்களுக்குமே என்பதையும் அவர்கள் அறிவித்தனர்.
அரசாங்கத்தை மாற்ற நினைத்தால் அமைதியான வழிகளில் அதைச் செய்ய வேண்டும்.
முதல்ல ஒரு ஐந்து வருடம் நீங்க ஒற்றுமையா இருக்க பாருங்கள் …! நீங்களும் உங்கள் (கரப்பான் கட்சி )ஹரப்பான் கட்சியும் வாந்தி வருதுல …….!
வரலாறு தெரியாதவள். பலவிஷயங்களில் அதிரடி புரட்சி வழிதான் நல்லது நடந்திருக்கிறது. நான் பலாத்காரத்தை விரும்பாதவன்– ஆனால் பல சமயங்களில் அதுவே தேவையாக இருக்கிறது– எல்லா மானிடர்களும் மரியாதையுடன் நடந்தால் இவ்வுலகம் இப்படி நாறி போய் இருக்காது.