துருக்கியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இராணுவத்தின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக தெருக்களில் கூடி புரட்சியை முறியடித்தனர்.
கடலோரமாக விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த எர்டோகன் இன்று அதிகாலை இஸ்தான்புல் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் ஆதரவாளர்களுடன் இருப்பதைத் தொலைக்காட்சிச் செய்திகளில் காண முடிந்தது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எர்டோகன், புரட்சி ஒரு“ தேசத் துரோகச் செயல்” என்று வருணித்து அதற்குப் பொறுப்பானவர்கள் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
புரட்சிக்கு வித்திட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.