முகைதின்: எதிரணி போர் ஓய்வைக் கடைப்பிடித்து பிஎன்னுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்

muhஎதிரணியினர்   தங்களுக்குள்   அடித்துக்  கொள்வதை    நிறுத்தி   அடுத்த    பொதுத்   தேர்தலை    எதிர்கொள்ள  ஒன்றுபட   வேண்டும்   என்பதை   அம்னோவிலிருந்து   நீக்கப்பட்ட  அதன்   துணைத்   தலைவர்   முகைதின்   யாசின்   ஒப்புக்கொள்கிறார்.

ஹராபான்,  பாஸ்    ஆகியவையும்   மற்ற  தரப்பினரும்   அடுத்த   பொதுத்   தேர்தலுக்காக    ஒரு  கூட்டு  எதிரணியை   அமைப்பது  குறித்து  ஒன்றுகூடி     விவாதிக்க    வேண்டும்  என    பிகேஆர்   நடப்பில்    தலைவர்  அன்வார்  இப்ராகிம்,     பாஸ்   துணைத்   தலைவர்    துவான்   இப்ராகிம்  துவான்  மான்,   பிகேஆர்   துணைத்    தலைவர்    அஸ்மின்   முகம்மட்   அலி   முதலியோர்   வலியுறுத்தியிருப்பதைத்  தாமும்  ஒப்புக்கொள்வதாக    முகைதின்   கூறினார்.

“பிஎன்னைத்   தவிர்த்து   மற்ற    கட்சிகளாலும்   மலேசியாவை   மேலும்  சிறப்பாக   ஆள  முடியும்   மக்களின்   தேவைகளை  நிறைவேற்ற  முடியும்  என்ற  நம்பிக்கையை  மக்களுக்குக்  கொடுக்க  அப்படி  ஒரு   கூட்டணி  அமைவது   மிகவும்   முக்கியம்”,  என்றாரவர்.