கபீர் ஹார்பி என்றால் கொல்ல வேண்டும் என்பதில்லையாம், அம்னோ இளைஞர் விளக்கம்

 

yrsayhafirபகாங் முப்தி அப்துல் ரஹ்மான ஓஸ்மான் கபீர் ஹார்பி என்ற சொற்களைப் பயன்படுத்திய போது முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லலாம் என்ற அர்த்ததுடன் கூறவில்லையாம். இந்த விளக்கத்தை இப்போது அளித்தவர் அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் பாதுல் பாரி மாட் ஜாயா.

முஸ்லிம் அல்லாதவர்களை கொல்வது அனுமதிக்கப்படுகிறது என்ற அர்த்தத்தில் அவர் கூறவில்லை என்றும் ஹார்பி என்றால் ஒரு வகைப்பட்ட சிந்தனைக்கு அல்லது தத்துவத்திற்கு எதிரான  சிந்தனைப் போர் என்றும் அந்த முப்தி தம்மிடம் கூறியதாக நேற்றிரவு நீலாயில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பாதுல் தெரிவித்தார்.

முப்தி அப்துல் ரஹ்மான் இஸ்லாத்தை எதிர்க்கும் முஸ்லிம் அல்லாதவர்களை, டிஎபிகாரர்களை மட்டுமல்ல, கபீர் ஹார்பி செய்யலாம் பின்னர் விளக்கம் அளித்திருந்தார். அவரின் இக்கூற்றுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அந்த முப்திக்கு எதிராக எழுப்பப்பட்ட கடும் கண்டனத்தை தொடர்ந்து அவர் கூறிய கருத்து தேசிய நிந்தனையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனல், அந்த முப்தி தாம் கூறியதை திரும்பப் பெற்றுகொள்ள மறுத்து விட்டார்.