மகாதிரின் புதிய கட்சி, ஹரப்பான் விவாதிக்கவிருக்கிறது

 

toconsidermsproposalமுன்னாள் பிரதமர் அறிவித்துள்ள புதிய கட்சி பற்றி விவாதிக்க பக்கத்தான் ஹரப்பான் தலைமத்துவ மன்றம் ஒரு கூட்டம் நடத்தவிருப்பதாக டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியை அமைக்கலாம். ஆனால், நாம் அக்கட்சியின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது என்றாரவர்.

அவர் அப்பெரும் கூட்டணி குறித்த டிஎபியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார். உள்நோக்கம் கொண்டவர்கள் அவரது கருத்தை திரித்துவிடக்கூடும் என்றார்.

பக்கத்தான் ஹரப்பானின் ஓர் உறுப்பினர் என்ற முறையில் நாம் ஒரு குழு அறிக்கையை வெளியிட விரும்புவதாக லிம் மேலும் கூறினார்.

ஹரப்பான் பங்காளியான பிகேஆர் அப்புதிய கட்சியுடன் ஒத்துழைப்பது பற்றி ஆலேசிக்கப்படும் என்று கூறிற்று.