இஸ்லாத்திற்கு டிஎபி ஒரு மிரட்டலாக உருவெடுத்தால், அமனா அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் என்று அமனா உதவித் தலைவர் ஹசானுடின் முகமட் யூனுஸ் கூறினார்.
உண்மையாகவே பாடம் சொல்லிக் கொடுக்கப்படும் என்று கூறிய அவர், இஸ்லாம் பற்றி டிஎபி தவறு இழைத்திருந்தால் அது பாடம் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறது என்றாரவர்.
தாம் இதைச் சொல்லலாமா என்பதற்கு டிஎபியின் அமைப்பாளர் அந்தோனி லோக்கின் அனுமதியை கேட்டிருந்ததாகவும் ஹசானுடின் தெரிவித்தார்.
டிஎபி (இஸ்லாத்தின்) எதிரியாகிக் கொண்டிருந்தால் அதற்கு அமனாவும் இதர முஸ்லிம் அமைப்புகளும், இங்கே இன்றிரவு கூடியிருக்கும் பேச்சாளர்கள் உட்பட, பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்.
“நாங்கள் அவர்களை மாற்றுவோம், கல்வி புகற்றுவோம், ஏனென்றால் அவர்கள் பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்”, என்று நெகிரி செம்பிலான், நீலாயில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கூறினார்.
இஸ்ரேலிய குடிமக்கள் மலேசியாவுக்கும் வருவதற்கு மலேசிய அரசாங்கம் விதித்திருக்கும் தடை குறித்து ஒரு டிஎபி உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்த சம்பவத்தை சுட்டிக் காட்டிய அவர், தனிப்பட்ட முறையில் கடிந்துரைக்கப்பட்டதும், அது (டிஎபி) (பகிரங்கமாக) மன்னிப்பு கேட்டுக்கொண்டது என்றாரவர்.
டிஎபி கையொப்பமிட்டுள்ள பக்கத்தான் ஹரப்பான் ஒப்பந்தத்தில் இஸ்லாத்தை மலேசியாவின் அதிகாரப்பூர்வமான சமயமாக நிலைநிறுத்தவும், மலாய்க்காரர்கள் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஹசானுடின் மேலும் கூறினார்.
கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இதர பேச்சாளர்கள் இஸ்லாத்தை பாதுகாக்கும் டிஎபின் மனமார்ந்த நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
இக்சிம் என்ற அமைப்பைச் சேர்ந்த எங்கு அஹமட் ஃபாட்சில் எங்கு அலி டிஎபியின் சட்டவிதியில் மலேசியாவை ஒரு சமயச் சார்பற்ற நாடாக்குவது அதன் இலக்குகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
சமயச் சார்பற்றது என்றால் நாட்டின் நிருவாகத்தில் அல்லது பொதுவான விவகாரங்களில் சமயத்திற்கு இடமில்லை என்று எங்கு அஹமட் ஃபாட்சில் கூறினார்.
பின்னர், எங்கு அஹமட் அமனாவையும் ஹசானுடினையும் மறைமுகமாகச் சாடினார். பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அமனா பணத்திற்காக டிஎபியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்றாரவர்.
சமீபத்தில் டிஎபி சமயச் சார்பான அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பகாங் முப்தி அப்துல் ரஹ்மான் ஓஸ்மான் டிஎபியை கபீர் ஹார்பி என்று வர்ணித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த கம்மனாட்டிகளுக்கு மட்டும் தான் உரிமைகள் இருக்கிறது– மற்றவர்களுக்கு ஒன்றும் கிடையாது– இதுபோன்ற கீழ்த்தர புத்தி இவங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது– இப்போது சீனாவுக்கும் அகங்கார வெறி . TRUMP சீக்கிரம் வாடா. உன்னை நம்பலாமா? இல்லை ஒபாமா போல் வெறும் பேச்சுதானா?
நல்ல கூட்டணி போங்கோ!
உலகத்திலேயே கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட நீங்களடா ???????
ஐ.எஸ். தாக்கினால் என்ன செய்வீர்கள்?
ஐ.எஸ். முஸ்லீம்களை தாக்கினால் “தீவிரவாதிகள்” உடனடி நடவடிக்கை தேவை ஆனால் ஐ.எஸ். மற்ற இனத்தரவர்களை தாக்கினால் “போராட்டவாதிகள்” நடவடிக்கை கூடாது, மீறி நடவடிக்கை எடுப்போர் “காஃபீர் ஹர்பி” என்பதுதான் நமது நாட்டில் எழுதப்படாத சட்டமாயிற்றே !