எஸ்எம்இ: வருமானம் குறைந்துள்ள வேளையில் ஜிஎஸ்டியால் மேலும் பாதிப்பு

gstபொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)  அமலாக்கம்   செய்யப்பட்டதிலிருந்து   சிறிய,  நடுத்தரத்   தொழில்களின் (எஸ்எம்இ)   வருமானம்   குறைந்தது  20  விழுக்காடு  வீழ்ச்சி  அடைந்துள்ளது.

இந்த  வீழ்ச்சிக்குப்  பல   காரணங்கள்   இருந்தாலும்   ஜிஎஸ்டி  நிலைமையை   மேலும்   மோசமாக்கியுள்ளது  என  மலேசிய  எஸ்எம்இ  சங்கத்   தலைவர்   மைக்கல்   காங்   கூறினார்.

“ரிங்கிட்  மாற்று   விகிதம்   குறைந்து    விட்டதால்   இறக்குமதிகளில்   ஆதாயம்   குறைந்து  விட்டது.  அந்நியத்   தொழிலாளர்  விவகாரங்களும்   சிறு   தொழில்களைக்  கடுமையாக   பாதித்து   விட்டன”,  என  காங்   கூறியதாக  மலாய்  மெயில்    தெரிவித்துள்ளது.

“குறிப்பாக,  கடந்த  6  மாதங்களில்   நிலைமை   மிகவும்  மோசமடைந்துள்ளது.  விலைகள்   கூடியிருப்பதை   அறிந்து   பயனீட்டாளர்கள்   பொருள்  வாங்குவதை   வெகுவாகக்   குறைந்துக்  கொண்டிருக்கிறார்கள்”,  என்றாரவர்.

ஆனால்,   நிதி  அமைச்சர்   II   ஜோஹாரி  அப்துல்  கனி,  ஜிஎஸ்டி  பயனீட்டாளர்களையும்  வர்த்தகத்தையும்   பாதித்திருப்பதாகக்  கூறப்படுவதைக்   கடந்த    சனிக்கிழமை  மறுத்தார்.

ஜிஎஸ்டி    வரி   வசூலிப்பைச்   சீர்படுத்தியிருப்பதாகவும்    அரசாங்கத்தின்  வருமானம்    அதனால்   கூடியிருப்பதாகவும்   தெரிவித்தார்.