முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் எதிரணியினர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குப் புதிய கூட்டணி ஒரு தீர்வாக அமையும் என்று நம்பவில்லை.
அதில் இணையும் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் சில தரப்புகளை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு தெளிவான கொள்கைகள் கிடையாது என்றாரவர்.
“இதன் மூலமாக அவர்கள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. ஏனென்றால், அமனா அதற்கென தனி நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது, பிகேஆர் வேறு வகை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, டிஏபி வேறொரு திசையில் சென்று கொண்டிருக்கிறது.
“அக்கூட்டணியில் சில ஒற்றுமைகள் இருக்கலாம். ஆனால், வேறுபாடுகள் அதிகம்”, என்று காலிட் கூறியதாக த ஸ்டார் தெரிவிக்கிறது.
மிக்க நன்றி. தங்களுக்கு கொடுக்க பட்ட முதல் அமைச்சர் என்ற வாய்ப்பை முறையாக மக்களுக்கு பயன் படுத்தினீர்களா?
இவன் களுக்கும் பதவி வெறி தான்– அதிகார வெறி — வறட்டு கௌரவ வெறி — தன்னை தூக்கிக்கொண்டு ஆடவேண்டும் என்ற மட்டரக
எண்ணம் இவனைப்போன்ற ஈன ஜென்மங்களுக்கு– நாடு செழிக்க வேண்டும் எல்லா மலேசியர்களும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. துங்கு ஒருவனுக்கு மட்டுமே அது இருந்தது. இருந்து என்ன பயன்? அதை செயல் படுத்த வில்லையே— மற்றவர்கள் எல்லாம் தானும் தான் இனம் மட்டும் சுகமாக வாழவேண்டும் மற்றவர்கள் எக்கேடு கெட்டால் கவலை இல்லை..