புதிய கட்சிகள் உருவாகும்போது அவற்றை வரவேற்க வேண்டும் அதுதான் ஜனநாயக மரபு என்கிறார் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் புதிய கட்சி ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருப்பது குறித்து எதிர்வினை ஆற்றியபோது சிலாங்கூர் மந்திரி புசார் இவ்வாறு கூறினார்.
ஆனால், அப் புதிய கட்சியுடன் ஒத்துழைப்பது அதன் கொள்கைகளையும் திட்டங்களையும் பொறுத்திருக்கும் என்றாரவர்.
“அக்கட்சி சீரமைப்புத் திட்டத்தில் தன்னை இணைந்து கொள்ள முன்வர வேண்டும். சீரமைப்புத் திட்டத்தை ஆதரிக்கும் எந்தக் கட்சியுடனும் தனிப்பட்டவர்களுடனும் நாங்கள் கண்டிப்பாக ஒத்துழைப்போம்”, என அஸ்மின் கூறினார்.