காடிர் ஜாசின்: மகாதிர் கட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால் அம்னோ அதைத் தாக்குவது ஏன்?

kadirடாக்டர்  மகாதிர்  முகம்மட்   விரைவில்   அமைக்கப்போகும்   கட்சியால்   எதுவும்  ஆகாது  என்று  அதை   ஒதுக்கித்  தள்ளிய     அம்னோ   அதன்மீது   தொடர்ந்து    தாக்குதல்    நடத்துவது     ஏன்   என்று     மூத்த  செய்தியாளர்   ஏ.காடிர்   ஜாசின்   கேள்வி   எழுப்பினார்.

“அம்னோ/பிஎன்  தலைவர்களும்   அவர்களுக்குத்   துதி  பாடுவோரும்  மகாதிர்   அண்மையில்    அறிவித்த    புதிய   கட்சி   குறித்து   கவலை   கொள்ளத்    தேவையில்லை  என்ற   கருத்தில்   ஒன்றுபட்டிருப்பது    போலத்   தோன்றுகிறது.

“மைய   நீரோட்ட    ஊடகங்களிலும்    அம்னோ/பிஎன்  ஆதரவு   சமூக    ஊடகங்களிலும்   வந்துள்ள   செய்திகள்   அப்படித்தான்  நினைக்க   வைக்கின்றன”,  என   நியு  ஸ்ரேட்ஸ்  டைம்சின்   முன்னாள்   தலைமை    செய்தியாசிரியரான  காடிர்  தம்  வலைப்பதிவில்   பதிவிட்டிருக்கிறார்.

புதிய  கட்சி   குறித்து    அஞ்சவில்லை  என்று    கூறிக்கொள்ளும்    அவர்களே   அது   மலாய்க்காரர்களைப்  பிளவுபடுத்தும்    என்றும்   மகாதிர்   எதிரணித்   தலைவரான   அன்வார்  இப்ராகிம்   இடத்தைப்  பிடிக்கப்    பார்க்கிறார்    என்றும்   குற்றம்   சாட்டுகிறார்கள்   என்றாரவர்.

“உத்தேசிக்கப்பட்டிருக்கும்    புதிய   கட்சி    தோல்வியுறும்,    அம்னோ/ பிஎன்னுக்கு   அது  ஒரு   மிரட்டல்    அல்ல    என்றால்   அதைத்    தாக்குவானேன்,  குடிகாரர்கள்போல்   அதன்மீது   இல்லாததும்  பொல்லாததும்  சொல்வது   ஏன்?”,  என    காடிர்   வினவினார்.

புதிய  கட்சியை  எண்ணியும்   அதனால்  உருவாகப்   போகும்    ஒரு  மிகப்   பெரிய   எதிரணிக்  கூட்டணி   குறித்தும்    அம்னோ    தலைவர்கள்   கலக்கமடைந்திருக்கிறார்கள்  என்றவர்   கருதுகிறார்.

“பயப்படவில்லை   என்றால்  சிலர்   புதிய    கட்சியின்   தலைமைத்துவம்    என்று  பொய்யான    பட்டியலை   வெளியிட்டு   யாரயெல்லாம்   அந்தக்  கட்சித்   தலைவர்கள்    என்று   கருதுகிறார்களோ    அவர்களைப்  பழித்துரைக்கும்     இயக்கத்தைத்   தொடங்கியிருப்பது   ஏன்”,  என்று  காடிர்   கேள்வி  எழுப்பினார்.