கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவைமீது புரிந்துணர்வு குறிப்பு கையெழுத்தானது

highகோலாலம்பூருக்கும்   சிங்கப்பூருக்குமிடையில்   அதிவேக   ரயில் சேவை அமைக்கும்  கடப்பாட்டை   வலியுறுத்தி    மலேசிய அரசாங்கமும்    சிங்கப்பூர் அரசாங்கமும்     ஒரு   புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்   இன்று  கையெழுத்திட்டன.

பிரதமர்துறை    அமைச்சர்   அப்துல் ரஹ்மான்  டஹ்லானும்     சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை    ஒருங்கிணைப்பு அமைச்சர் கா பூன் வானும்    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   மற்றும்     சிங்கப்பூர்   பிரதமர்      லீ  ஹிசியன்   லூங்   ஆகியோரின்   முன்னிலையில்   அப்புரிந்துணர்வுக்   குறிப்பில்       கையெழுத்திட்டனர்.

அதிவேக  ரயிலால்   கோலாலும்பூர்-  சிங்கப்பூர்  பயணம்   90  நிமிடங்களாக    சுருங்கும்.