லிம் குவான் எங் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதற்காக டிஏபி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தக் கூடாது என இளைஞர் அமைப்பான சேலஞ்சர் கூறியது.
கட்சித் தேர்தல்களைத் தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக டிஏபி நேற்று அறிவித்தது “ஏமாற்றமளிப்பதாக” அந்த அமைப்பின் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.
கடந்த ஆண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் இதே போன்றுதான் கட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதாக அறிவித்தார். மகாதிர், பிரதமராக இருந்தபோது அவரும் அதைத்தான் செய்தார் என சைட் சாதிக் தெரிவித்தார்.
எலி எதற்கு அம்மணமாக ஓடுகிறது.
அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா! அதுமட்டுமல்ல, டி.ஏ.பி. கட்சி தேர்தலிலும் அநேக தில்லுமுல்லுகள் . தில்லுமுல்லு கோப்புகள் இன்னும் ROS இடம் தூங்குகிறது. 2013 ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய கிளைகள் கூட இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. 2012 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மத்திய செயலவை கூட இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. அப்பனும் மவனும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பதவியில் இருக்க செய்த ஊழல்கள் கணக்கில் அடங்கா.