ஜிஎஸ்டிக்கு எதிராக உள்ளூர் நிறுவனம் வழக்கு

gstபேரிச்சம்பழத்தை    இறக்குமதி    செய்து   விநியோகம்   செய்யும்   உள்ளூர்   நிறுவனமொன்று    அடிப்படைப்  பொருள்களுக்கும்    சேவைகளுக்கும்   பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து   விலக்களிக்கப்பட    வேண்டும்   என்று   கோரி   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றத்தில்     மனு  கொடுத்திருக்கிறது.

இதுவே   ஜிஎஸ்டிக்கு    எதிரான    முதல்  வழக்கு   எனக்   கருதப்படுகிறது.    Asia Kitchen Industries Sdn Bhd  அவ்வழக்கைத்  தொடுத்துள்ளது.   அந்நிறுவனம்  ஜிஎஸ்டி   வரிக்கு  உள்பட்ட    பழங்கள்,  காய்கறிகள்  பட்டியலில்    திருத்தம்    செய்யப்பட    வேண்டும்   என்று  கோரிக்கை   விடுத்த   அந்நிறுவனம்   உலர்ந்த   பேரீச்சம்பழத்துக்கு   ஜிஎஸ்டியிலிருந்து  விலக்களிக்கப்பட   வேண்டும்   என  வலியுறுத்தியது.

உலர்ந்த   பேரீச்சம்பழங்கள்   ‘சுன்னா  உணவுகள்’(நபி   முகம்மது   அவர்களால்  உண்ணப்பட்டவை).  முஸ்லிம்கள்  ரமலான்  மாதத்தில்  அவற்றை  உண்பார்கள்.  எனவே,  அதற்கு  வரிவிலக்கு  அளிக்கப்பட   வேண்டும்  என்று    அது   கூறிற்று.