அமெரிக்க நீதித்துறை பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக த வால் ஸ்ட்ரிட் ஜர்னல் (WSJ) இன்று அறிவித்திருந்தது. இது நடந்தால் இதுவே அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய சொத்துப் பறிமுதலாக விளங்கும்.
சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை சிவில் வழக்குகளைத் தொடுக்கும் என சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த நாளேடு தெரிவித்தது.
பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களில் “மலேசிய நிதி நிறுவனத்திலிருந்து கையாடப்பட்ட பணத்தில்” வாங்கப்பட்ட சொத்துக்களும் மற்றவையும் உள்ளிட்டிருக்கும் என அது கூறியது.
மலேசிய அரசாங்கம் “மலேசிய நிதி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட நன்கொடை பணத்தை கொண்டுதான் 1எம்டிபி சொத்துக்களை வாங்கியது” என்று நிரூபிக்க வக்கில்லாதவர்கள் என்பதை நன்கறிந்து கொண்டு “மலேசிய நிதி நிறுவனத்திலிருந்து கையாடப்பட்ட பணத்தில்” என்ற அமெரிக்க நீதித்துறை நக்கல், சிவப்பு சட்டையினரை சினமடைய வைத்திருப்பதால், அமெரிக்க நீதித்துறை + மாமா மகாதீரீன் கூட்டு சதியை தகர்க்க சிவப்பு சட்டையினார் அமெரிக்கா மீது படையெடுத்து விடுவார்களோ ? என்ற பயத்தில் உலகமே உறைந்து போயிருக்கிறது.