பொதுக் கணக்குக்குழுவின் 1எம்டிபி மீதான அறிக்கை தொடர்பில் போலீஸ் மேற்கொண்டுள்ள விசாரணைகள் எந்த அளவில் உள்ளன என்ற கேள்விக்கு போலீஸ் படை த் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிமால் பதில் அளிக்க இயலவில்லை.
அந்த விவகாரம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் சம்பந்தப்பட்டது என்றாரவர்.
“ஐஜிபி அதைக் கவனித்துக் கொள்வதால் என்னால் பதிலளிக்க இயலாது”, என நூர் ரஷிட் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் கூறினார்.
இதனிடையே, மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன் போலீஸ் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளானதாகக் கூறி இருப்பது பற்றி வினவியதற்கு அவ்விவகாரம் நியாயமான முறையில் விசாரிக்கப்படும் என்றார்.
“அவர் போலீஸ் புகார் செய்ய வாய்ப்பளிப்போம். சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் நினைத்தால் அது பற்றி அவர் புகார் செய்யலாம்.
“அவர் புகார் செய்தால் அந்த விவகாரம் நியாயமான முறையில் விசாரிக்கப்படும்”, என்றார்.
அமெரிக்கா 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய தயாராகிறது ;
“மலேசிய நிதி நிறுவனத்திலிருந்து கையாடப்பட்ட பணத்தில்” என்ற செய்தியை வெளியிட்ட சில நிமிடங்களில், “1எம்டிபி மீதான புலன் விசாரணை குறித்து டிஐஜிபி மெளனம்” என மற்றொரு செய்தியா ? உங்களுடைய லொள்ளு தங்க முடியலை.