பினாங்கில் திடீர் தேர்தல் நடந்தால் பிகேஆரும் எதிரணியும் மலாய் தொகுதிகள் சிலவற்றை இழக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.
பாஸ் விலகி நின்று எதிரணி தொடர்ந்து பிளவுபட்டுக் கிடந்தால் இதுதான் நடக்கும் என தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பைசால் ஹஸிஸ் கூறினார்.
“இப்போதைய நிலவரம் தொடருமானால் மலாய்க்காரர் தொகுதிகளில் பல்முனை போட்டி நிலவும். அது பக்கத்தானுக்கோ எதிரணிக்கோ நல்லதல்ல”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆனால், மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஆவாங் அஸ்மான் ஆவாங் பாவி பைசலின் கருத்தை ஏற்கவில்லை. திடீர் தேர்தலில் பிகேஆரின் கை மேலோங்கும் என்றாரவர்.
டிஏபி மீதான அனுதாபம் பிகேஆருக்குச் சாதகமாக அமையும் என்பது அவருடைய கருத்து.
பிகேஆர், பாஸ் ஆதரவாளர்களையும் நம்பி இருக்கலாம். பினாங்கு பாஸ் ஆதரவாளர்கள் கெடா அல்லது கிளந்தான் பாஸ் ஆதரவாளர்களிலிருந்து மாறுபட்டவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அவர்களில் பலருக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அம்னோவுடன் அணுக்கமாக உறவாடுவது பிடிக்கவில்லை என்றார்.
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமா மாத்திடுங்க.
இப்போதைக்கு பினாங்கில் திடீர் தேர்தல் கிடையாது. அடுத்த பொதுத்தேர்தல் வரையிலாவது மவன் லிம் குவான் எங் பதவியில் இருந்துவிட்டு போகட்டும் என அப்பன் திட்டம் போட்டுள்ளார்.