நியுயோர்க் டைம்ஸ்: அமெரிக்க நீதித்துறை புகாரில் நஜிப்பின் பெயர் இடம்பெறாது

 

Ntimesஅமெரிக்க நீதித்துறை 1எம்டியின் பணத்திலிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அதன் புகாரில் பிரதமர் நஜிப் ரசாக் பெயர் இடம்பெறாது என்று அமெரிக்க நாளிதழான நியுயோர்க் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், பிரதமர் நஜிப்பின் வளர்ப்பு மகனும் ஹோலிவுட் சினிமா படம் தயாரிப்பாளருமான ரிஸா அசிஸ் மற்றும் சர்சைக்குரிய வணிகர் லோ தெக் ஜோ, ஜோ லோ என்று அழைக்கப்படுபவர், ஆகியோர் அந்தப் புகாரில் இடம்பெறுவர்.

1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்ட அமெரிக்க டாலர் 1 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக அமெரிக்க அரசு சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவதில்லை. இந்த விவகாரத்தில் வழக்கத்திற்கு மாறாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்படும் சாத்தியம் தவிர்க்க முடியாது என்று அந்த அறிக்கை கூறுகிறது.