புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.
அந்த வகையில், புகலிடம் கோரி மலேசியாவுக்கு வருகைத்தரும் அகதிகளுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சின் அனுமதியின்றி அகதிகள் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் துறையின் அமைச்சர் சாஹிதன் காஷிம் இவ்வாறு கூறியுள்ளார்.
மலேசிய நாட்டு அதிகாரிகளின் அனுமதியின்றி அகதிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படக்கூடாது. குறித்த விடயத்தினை அகதிகளுக்கான ஆணையத்திற்கு என பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.
இந்நிலையில், அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இனி நேரடியாக அகதிகளுக்கு அடையாள அட்டையை வழங்க முடியாது.
அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நாட்டில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இனி வரும் நாட்களில் மலேசியாவுக்கு வரும் அகதிகள் குடிவரவுத்துறையால் கைதுசெய்யப்பட்டு குடிவரவு அல்லது உள்துறை அமைச்சின் அனுமதிக்கு பின்னரே அடையாள அட்டை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், சிரியா, சோமாலியா, ஈராக், ஈரான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 154,140 பேர் அகதிகளாக மலேசியாவில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இந்நிலையில், மலேசிய அரசின் இந்த தீர்மானத்தினால் இனி வரக்கூடிய அகதிகளுக்கு அனுமதி வழங்குவது மிகவும் கடினமானது என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், மலேசியாவில் புகலிடம் கோரி அகதிகள் வருகை தரும் பட்சத்தில் நாடுகடத்தப்பட கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
இது தமிழ் அகதிகளுக்கு மட்டும் தானே.
அகதிகளோடு கள்ள குடியேறிகளையும் அனுப்பினால் நாடு சிறக்கும்.
சமீபத்தில் சென்னையில் இருந்த வந்த பயணி ஒருவர் குடிநுழைவு துறையினால் அனுமதியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட நபர் 2 நாள் கழித்து சென்னை / பாங்காக் வழியாக KLIA-யில் வந்திறங்கி குடிநுழைவு துறைனால் எவ்வித தடையுமின்றி நாட்டிற்குள் வர அனுமதி பெறுகிறார்.
நமது நாட்டின் பாதுகாப்பு லட்சணம் இப்படி இருக்கும்போது அகதிகளையோ அல்லது கள்ள குடியேறிகளையோ அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.
அதைச் சொல்லுங்கள் . அந்த அளவிற்கு கையால் ஆகாதவர்களை வேளையில் வைத்துள்ளது கேவலமான இந்த அ…கம்
பிரச்சனை ஒன்றுமில்லை! வங்காளதேசத்தில் இருந்து தினசரி விமானத்தில் வந்து இறங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள்! கட்டுப்பாடாவது கடப்பாறையாவது!