மலேசிய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணி இரண்டாண்டுகளாக நடைபெற்று வந்துள்ள வேளையில் தவறான இடத்தில் தேடி வருகிறோமோ என்ற சந்தேகம் இப்போது எழுப்பப்பட்டுள்ளது.
2014 மார்ச்சில், 239 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச் 370 திடீரென மாயமாக மறைந்தது . மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பாலுள்ள கடலில் 120,000 க்கு மேற்பட்ட சதுர கிலோமீட்டர் பரப்பில் அதைத் தேடும் பணி ஈராண்டுகளாக நடந்து வருகிறது.
இதுவரை அப்பகுதியில் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இன்னும் மூன்று மாதங்களில் தேடும் பணி முடிவுக்கு வரும். அதன் பின்னர் தேடலைத் தொடர்வதாக நிறுத்திக் கொள்வதா என்பதை மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகியவை முடிவு செய்யும். இதற்காக நாளை அம்மூன்று நாடுகளும் சந்தித்துப் பேசவுள்ளன.
இதனிடையே, விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவின் இயக்குனர் பால் கென்னடி , “அது அங்கு இல்லை என்றால், வேறு எங்கோ இருக்கிறது என்றுதான் பொருள்”, என்று ராய்ட்டரிடம் தெரிவித்தார்.
கென்னடி, விமானம் இப்போது தேடப்படும் இடத்திலேயே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் சாத்தியம் உண்டு என்பதை மறுக்கவில்லை. அதேவேளை, அது விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்ட இடத்தையும் தாண்டி அது சென்றிருக்கலாம் என்று அவரும் அவரது குழுவினரும் கூறினர்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே.
ஏதும் பொருள் காணாமல் போய்விட்டால் “MH370″-போல என உதாரணம் சொல்லலாம் என்று நினைத்தால், ” ‘MH370’: தவறான இடத்தில் தேடப்பட்டு வருகிறதோ?” என்று செய்தி வெளியிட்டு “MH370”-யை கண்டுபிடிக்க வழி வகுத்து கொடுப்பது மட்டும் இல்லாமல், பிரதமர் கூறுவதெல்லாம் பொய் என்பதை நிரூபிக்காமல் விட மாட்டீர்கள் போலிருக்கு.