நஜிப்புக்கு எதிராக பேரணி: மகாதிர் ஆலோசிக்கிறார்

mootமலேசியர்கள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   பதவி  விலகக்   கோரி   அமைதியான   முறையில்   பேரணி    நடத்தலாம்   என    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   கூறியுள்ளார்.

“மலேசியர்கள்  பயந்தாங்கொள்ளிகள்.  மற்ற    நாடுகளில் ,  மில்லியன்  கணக்கான   மக்கள்   தெருக்களில்  இறங்கி  விடுகிறார்கள்.  மலேசியர்கள்   மிகவும்   நல்லவர்கள்.  நாம்  அப்படியெல்லாம் (ஆர்ப்பாட்டங்கள்)  செய்வதில்லை.

“(பிரதமரின்)  பதவி   விலகலைக்  கோரி    அமைதிப்  பேரணி    நடத்தலாம்”   என்று   மகாதிர்   இன்று   புத்ரா  ஜெயாவில்   செய்தியாளர்    கூட்டமொன்றில்     கூறினார்.
அக்கூட்டத்தில்  இருந்த   முன்னாள்   பெர்சே    தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசன்,   பெர்சே   அது  பற்றி  அலோசித்து   வருவதாகக்   கூறினார்.

1எம்டிபி-  இல் கையாடப்பட்ட    பணத்தில்    அமெரிக்காவில்   வாங்கப்பட்ட   சொத்துக்களைப்   பறிமுதல்   செய்ய    வழக்கு   தொடுக்கப்படுவதாக   அமெரிக்க   நீதித்துறை     அறிவித்திருப்பதை    அடுத்து   நஜிப்புக்கு  எதிராக   அமைதிப்   பேரணி   நடத்தும்   ஆலோசனையை  மகாதிர்   வெளியிட்டார்.