1எம்டிபி நிதியிலிருந்து களவாடல் நடந்திருப்பது குறித்து அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டிருக்கும் விசாரணை பற்றி ஊகங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தினார்.
சட்ட நடவடிக்கைகள் முழுமைபெறும் வரையில் நாம் எந்த ஊகங்களையும் செய்யாமல் இருப்பது விவேகமாகும் என்று அவர் இன்று மலாய் மெயில் ஓன்லைன் செய்திருந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடுத்துள்ளவை சிவில் வழக்குகள், கிரிமினல் வழக்குகள் அல்ல. ஆகவே, இந்த வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், அவரது வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ் உட்பட, டிஒஜேயை நீதிமன்றத்தில் சந்திப்பர் என்று நஜிப் மேலும் கூறினார்.
“அவருக்கு (ரிஸாவுக்கு) உரிமைகள் உண்டு, சட்ட நடவைக்கைகள் எடுப்பதை அனுமதியுங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் வழி அவர்கள் தரப்பு பதிலை அமெரிக்காவில் கூறுவார்கள்”, என்று தெவித்தார்.
இதெல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் தான் நடக்கும். முதலாம் உலகத்தில் இந்நேரக்ம் நம்பிக்கை நாயகன் இருக்கும் இடம் கம்பிகளுக்கு பின்.
ஊகங்கள் ஊக்க மருந்து போல! உக்கார்ந்து ஊடானா சாப்பிட முடியும்!
“ஊகங்கள்” பின்னாளில் “உண்மைதான்” என்று நீங்களும் உங்கள் அரசாங்கமும் பலமுறை நிரூபித்துள்ளீர்கள் அப்படியிருக்கும்போது இந்த “ஊகத்தையும்” உண்மைதான் என்று மக்கள் நம்பி விட்டார்கள். என்னதான் நீங்கள் அறிவுறுத்தினாலும் வலியுறுத்தினாலும் மக்கள் உங்களை “நம்பிக்கையற்ற நாயகனாகத்தான்” பார்க்கிறார்கள்.